Thursday, January 26, 2006

சுய புராணம்

நீண்ட நாள் யோசித்து யோசித்து அப்படி இப்படி என்று ஒரு வழியாக ஆரம்பித்தாயிற்று.

இந்த வலைப் பூவில் என்ன எழுதுவது எதைப் பற்றி எழுதுவது என்ற வரைமுறைகள் ஏதும் இல்லை. ஆனால் ஆரோக்கியமான விஷயங்கள் மட்டுமே இடம் பெறும்.

நான் எழுத்தாளனோ, சிந்தனைவாதியோ, அறிவிஜீவியோ இல்லை. இல்லை. இல்லை.

இது தான் என் முதல் எழுத்து. பல முறை எழுத நினைத்ததுண்டு. ஆனால் துணிந்ததில்லை. ஆகையால் மிகவும் எதிர்பார்ப்புடன் வருபவர்கள் தயவு செய்து மன்னிக்கவும்.

இங்கு என்னைப் பற்றிச் சொல்ல அதிகம் இல்லை ஜெண்டில்மேன். நான் ஒரு சாதாரணமான சராசரி மனிதன்.

எல்லோரையும் போல நானும் உணர்வுகளின் தொகுப்பு தான்.

சொல்றேன் கேளுங்க ( இல்ல படிங்க)

பேரு : விஜயன்னு சொல்றாங்க.

ஊரு : வேலனோட கடைசி வீடு

அப்பா : திரு.முனுசாமி. (மரியாதை தான்!!)

வயது : நாலு கழுதை வயசாவுதுன்னு எங்க ஆத்தா சொல்லும்.

கல்யாணம் : பொண்டாட்டிய பக்கத்துல வச்சுகிட்டு கேக்கற கேள்வியா இது?

புள்ள குட்டிங்க : ரெண்டும் வாலுங்க.

படிச்சது : இந்த இடத்துல தான் மாநிலத்துல ரெண்டாவது பெரிய ஜெயில் இருக்குது.

பொழப்பு : நெறய ஊரு மெய்ஞ்சுட்டு இப்ப தென் கொரியா (அய்யோ ரொம்ப கஷ்டங்க சாப்பாட்டுக்கும் பேசறதுக்கும்)

தொழில் : அட ஏங்க கேக்கறீங்க. இரும்புங்க கூட ஒரே சத்தம்.

சம்பளம் : பாத்தீங்களா. ஊர்லயே நெறய பேருக்கு சொல்ல மாட்டேன்.

பொழுதுபோக்கு : மெயினா ஊர் சுத்தறது தாங்க. அப்புறம் பாட்டு, புக்கு, ஊர் வம்பு பேசறது.

பிடித்த ஹீரோ : அப்துல் கலாம். ( நீங்க சினிமாவுல கேக்குறீங்களா?!)

பிடித்த ஹீரோயின் : சத்தியமா குஷ்பூ இல்லீங்க.

நகைச்சுவை நடிகர் : தமிழ் நாட்டு அரசியல் வா(வியா)திகள்

பிடித்த அரசியல்வாதி : வம்புங்க. அப்புறம் எது எழுதினாலும் சீல் குத்திடுவீங்க.

காதல் : அப்டீன்னா என்னங்க. (ஹலோ இது ரொம்ப ஓவரா தெரியல?)

சரி. இதுவரைக்கும் இது போதும்.

நீங்க என்ன நினைக்கிறீங்க?












6 Comments:

At 12:35 AM, Blogger கைப்புள்ள said...

வாங்க விஜயன்,
வந்து ஒரு கலக்கு கலக்குங்க. தென் கொரியாவில் பணி புரிகிறீர்களா? அடேங்கப்பா! தங்கள் மன உறுதியைப் பாராட்ட தான் வேண்டும்.

சர்ச்சைக்குள் மாட்டிக் கொள்ளாமல் பொதுவான விஷயங்களை எழுதுங்கள். தங்கள் முயற்சி தொடர என் வாழ்த்துகள்.

 
At 6:25 PM, Blogger விஜயன் said...

மிக்க நன்றி கைப்புள்ள.

//தென் கொரியாவில் பணி புரிகிறீர்களா? அடேங்கப்பா! தங்கள் மன உறுதியைப் பாராட்ட தான் வேண்டும்//

ஆமாம். இங்கு நாய்க் கறி ரொம்ப விஷேசம். அனுப்பி வைக்கவா?

 
At 3:48 AM, Blogger PKS said...

Second Big Jail in state Ethu? Vellore aa? Theriyaliye. Thirutani voor enru solvathai paarthal, vellorethaan enru ninaikirean.

Went to Thirutani in 2000. Has changed a lot. Before that went in 1994 end :-)

Niraiya Ezuthunga.

Anbudan, PK Sivakumar

 
At 6:43 PM, Blogger கைப்புள்ள said...

//இங்கு நாய்க் கறி ரொம்ப விஷேசம்//

அப்புறம் கிம்சீ அப்புறம் ஆக்டபஸ்

 
At 10:09 AM, Blogger விஜயன் said...

நன்றி சிவா. ஆமாம் வேலூர்தான்.
உங்களின் ஆதரவு என் ஊக்கம்.

கைப்புள்ளக்கு எப்படி இதெல்லாம் தெரியும்.

 
At 2:33 PM, Blogger கைப்புள்ள said...

//கைப்புள்ளக்கு எப்படி இதெல்லாம் தெரியும். //

நாலே நாலு நாள் நாமளும் இருந்தோம்ல கொரியாவுல?

 

Post a Comment

<< Home