Saturday, January 28, 2006

நம் காதில் பூ நிச்சயம்!!

அனைவருக்கும் வணக்கம்.

செய்திகள்

பீகார் கவர்னர் தேசியக் கொடியேற்றிய பிறகு முந்தைய ஆட்சிக் கலைப்புக்கு பொறுப்பேற்று ராஜினாமா.

கர்நாடக முதல்வர் தரம்சிங் ராஜினாமா மற்றும் குமாரசாமி ஆட்சி அமைக்குமாறு கவர்னர் அழைப்பு.

இவை போன்ற செய்திகள் நம் இந்திய ஜனநாயகத்தில் மிகச் சாதாரணமாக நடக்கின்றன.

இதில் பீகார் ஆட்சிக் கலைப்புக்கு சொன்ன காரணம் 'குதிரை பேரம்' நடக்கிறது. (பாஜக, எம் எல் ஏக்களை விலைக்கு வாங்குகிறது?!!!)

ஆகையால், கர்நாடகாவில் குதிரை பேரம் நடக்காமல் இருக்க எம் எல் ஏக்கள் கௌரவச் சிறையில் வைக்கப் பட்டனர். (காங்கிரஸ், எம் எல் ஏக்களை விலைக்கு வாங்காமல் இருக்க??!!)

உண்மையைச் சொல்லப் போனால் அவரவர்கள் தங்கள் பதவியை தக்க வைத்துக் கொள்ள கட்சி பாகுபாடின்றி இது போல செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது என்னைப் போன்றவர்களுக்கு.

இன்னும் கர்நாடகாவில் நிறைய அரசியல் பரபரப்புக் காட்சிகள் அரங்கேறும் வாய்ப்புகள் உள்ளன. ஆகையால் நமக்கு பொழுதுபோக்குகளுக்கு பஞ்சமில்லை. எல்லோரும் டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை தவிர்த்து விட்டு அரசியல் நகைச்சுவைகளை ரசிக்கலாம்.

இதுபோக தமிழகம் அடுத்த தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இப்பொழுது எந்த கட்சியுடன் யார் இருக்கிறார்கள், வரும் தேர்தலில் யாருடன் யார் இருப்பார்கள் என்று அனைவரும்(வாக்காளர்கள்) ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதிமுக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக சலுகைகளையும், திட்டங்களையும் அறிவித்துக் கொண்டு, கூட்டணிக்காக கதவுகளை திறந்தே வைத்திருப்பதாக கூறுகிறது.

ஏழு கட்சிக் கூட்டணியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

வைகோ எங்கள் ரத்தம் எல்லா குரூப்பிலும் சேரும் என்று ஒரு பக்கம்.

வழக்கம் போல் மருத்துவர் ராமதாஸ்(இது தமிழ்??)சீட்டு கணக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

கம்யூனிஸ்டுகள் மதில் மேல் பூனை.

திமுக மத்தியில் கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.(இந்த லட்சணத்தில் கூட்டணி ஆட்சி என்ற கோஷம் வேறு. காங்கிரஸ் என்றால் காமடி?)

இதில் போதக் குறைக்கு கேப்டன் வேறு. பாவம் தமிழ் வாக்காளப் பெருமக்கள்.

இதில் ஹைலைட் என்னவென்றால் பார்வார்ட் பிளக் கட்சியின் மாநில பொதுசெயலாளர்.(யார்னு தெரியலியா? அலைகள் ஓய்வதில்லை நாயகன்). இதெல்லாம் கொடுமையல்லாமல் வேறென்ன?.

ஆக, எதிரும் புதிருமாக இருந்த கட்சிகள் கூட்டனி அமைக்கும் போது நம் காதில் பூ நிச்சயம்!!.அனைவரும் தயாராக இருங்கள்.

மீண்டும் சந்திக்கிறேன்.

0 Comments:

Post a Comment

<< Home