சானியா மிர்சாவுக்கு பத்மஸ்ரீ விருது-சில சந்தேகங்கள்
சானியா மிர்சாவுக்கு மத்திய அரசால் வழங்கப் படும் விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப் படுவதாக செய்திகள் படித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
இதன் தொடர்ச்சியாக எனக்குள் எழுந்த சில ஐயப்பாடுகள்.
சானியா மிர்சா உலக தர வரிசையில் 32 வது இடத்தில் இருக்கிறார் என்பது மிகவும் பெருமைப் படத்தக்க விஷயமே என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை. மற்றபடி விளையாடும் திறமையைப் பொறுத்தவரை இவர் கடந்து செல்ல வேண்டிய பாதைகள் நிறையவே உள்ளன.
இவருடைய service(தமிழ்?)போடும் முறையும், வேகமும் இன்னும் மேம்பட வேண்டும். ஆடுகளத்தில் பந்தை விரட்டவும், place பண்ணும் லாவகமும் நிறைய கைகூடவேண்டும்.
என்னவோ மிர்சா டென்னிசில் முதலிடத்தையே பெற்றுவிட்டதைப் போல ஒரு தோற்றத்தை மீடியாக்களும், இதற்கு துணையாக அரசும் செயல் படுவது வேதனை தான். வேடிக்கை தான்.
டெண்டுல்கர் ஒரு மேட்சில் செஞ்சுரி அடித்து விட்டால் தூக்கி வைத்து கொண்டாடுவதும், நாலு மேட்சில் ரன் எடுக்கவில்லை என்றால் ஒரங்கட்டுவதும் மீடியாக்களுக்கும் நமக்கும் வாடிக்கை தானே?
இவருடைய நிலை இவ்வாறிருக்க, 32வது இடத்தில் இருக்கும் ஒருவருக்கு இந்த விருது பொருந்துமா என்ற கேள்வி தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது.
இந்த விருது இவருக்கு வழங்கப் பட்டது சரியென்றே வைத்துக் கொண்டலும், இதுவரை சாதனைகள் பல படைத்த பல பேருக்கு என்ன விருது வழங்கப்பட்டது.
தங்க மங்கை என்று அழைக்கப் பட்ட பி.டி உஷா, ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்லேஸ்வரி, லியாண்டர் பயெஸ், அஞ்சு ஜார்ஜ் இவர்களெல்லாம் சாதனைகள் செய்யவில்லையா. இவர்களெல்லாம் விருதுக்கு தகுதியில்லையா?.
அதுசரி, ஒலிம்பிக் ஜோதி இந்தியா வந்த போது அதை நடிகர்களிடம் கொடுத்து ஆரம்பித்து வைத்து சந்தோஷப் பட்டவர்களில்லையா நாம்?
விளையாட்டு நமக்கு 'விளையாட்டாய்' ஆகிவிட்டது
9 Comments:
ok, you should probably repent for being foreign now...
God 1
sinners 0
TCOJCOEMLDS
ம்... நீங்க கேட்கற கேள்வியும் சரித்தான்னு படுது..
ஆமா.. நியூஸ் உண்மையா?
- சாமி
என்னங்க நீங்க? சானியாவையும் உஷாவையும் ஒன்னா வைச்சு பார்க்கறீங்க? அவங்க எல்லாரையும் 'கவர்ந்தவங்களா' என்ன?
இதெல்லாம் கண்டுக்காதீங்கோண்ணா!
நல்ல கட்டுரை.
நானும் இதைத் தான் நினைத்தேன்.
சானியாவுக்கு இப்போவே இந்த மாதிரி பட்டங்கள் கொடுத்தால் அவருக்கு ஏதோ எல்லாமே சாதித்து விட்டோம் என்ற எண்ணம் வந்து விடும்.
அவர் இன்னமும் நிறைய சாதிக்க வேண்டியிருக்குது, அந்த எண்ணமும் வேகமும் அவரிடம் இருக்க வேண்டும்.
கடைசியாக சொன்ன வரி கலக்கலாக இருக்குது.
இந்த செய்தி உண்மை தான் அனானிமஸ். இங்கே பாருங்கள்
துபாய் வாசி:
நான் சொல்ல வந்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப் படும் என்று நினைத்தே நீங்கள் சொன்னதை முன்வைக்கவில்லை.
மற்றும் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட maximus, மற்றும் பரஞ்சோதி அவர்களுக்கு நன்றி
மன்னிக்கவும். கொடுக்கப்பட்ட இணைப்பு விடுபட்டிருக்கிறது. இங்கே செல்லவும்
தவறுக்கு வருந்துகிறேன்
ஒலிம்பிக்கில் பதக்கமே வெல்லாத பிடி உஷாவுக்கும், மூன்றாம் இடத்தை முக்கிப் பிடித்த மல்லேஸ்வரிக்கும் ஏற்கனவே பத்மஸ்ரீ கொடுத்திருக்கிறார்களே!
இந்தியப் பெண்களில் எத்தனை பேர் இதற்கு முன் தரப்பட்டியலில் சானியா அளவு முன்னிலை வகித்திருக்கிறார்கள்? அவர்களில் எவ்வளவு பேர்களுக்கு பத்மஸ்ரீ தரப்படவில்லை?
----பி.டி உஷா, ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்லேஸ்வரி, லியாண்டர் பயெஸ், அஞ்சு ஜார்ஜ் இவர்களெல்லாம் சாதனைகள் செய்யவில்லையா. இவர்களெல்லாம் விருதுக்கு தகுதியில்லையா---
PT Usha Padma Shree in 1985
Karnam Malleswari in 1999
Leander Paes got it in 2001
Anju George in 2004
Source(s): Padma Shri - Wikipedia | Karnam Malleswari | Anju Bobby George
நன்றி பாலா. தவறான தகவல் தந்தமைக்கு மன்னிக்கவும்.
எழுதும் வேகத்தில் தவறு நடந்துவிட்டது. இனி இதுபோல் நடக்காமல் கவனமுடன் எழுதுகிறேன்.
தவறு செய்வது மனித இயல்பு
மன்னிப்பது பாலாவின் அன்பு
சார் :-)
மன்னிப்பு எல்லாம் பெரிய வார்த்தை. தங்களின் பதிலுக்கு, வணக்கங்களும் நன்றிகளும்...
Post a Comment
<< Home