Wednesday, February 01, 2006

இந்த டிவி என்ன விலை?

நம்ம கைப்புள்ளக்கு இந்த ஜோக் சமர்ப்பணம்

நம்ம சர்தார்ஜி(கைப்புள்ள இல்ல?) ஒரு கடைக்கு போனார்.

அங்க இருந்த பொருளைப் பாத்து இந்த டிவி என்ன விலைன்னு கடைக்கார பையனைக் கேட்டார்.

அதற்கு அவன் சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லைன்னு சொன்னான்.

சர்தார்ஜி சரின்னுட்டு வெளியே போய் தன்னுடைய தல முடியெல்லாம் வெட்டிட்டு 'கெட் அப்பை' மாத்தி அதே கடைக்கு வந்தார்.

அதே பொருளைக் காட்டி 'இந்த டிவி என்ன விலைன்னு' கேட்டார்.
மறுபடியும் அவன் சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லைன்னு சொன்னான்.

சர்தார்ஜிக்கு ஆச்சரியம். எப்படி இவன் நம்மள கரெக்டா கண்டுபுடிச்சிட்டான்னு.
மறுபடியும் வெளியே போய் தன்னுடைய தாடி எல்லாம் ஷேவ் பண்ணி மீசை எல்லாம் எடுத்துட்டு கூலிங் கிளாஸ் போட்டுட்டு முழுசா ஆளே மாறி திரும்பவும் அதே கடைக்கு வந்தார்.

அதே பொருளைக் காட்டி 'இந்த டிவி என்ன விலைன்னு' கேட்டார்.

மறுபடியும் அவன் சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லைன்னு சொன்னான்.
சர்தார்ஜிக்கு ஒரே ஆச்சரியம் கோவம்.

ஆர்வம் தாங்க மாட்டாம அவன் கிட்ட எப்படி கரெக்டா நான் சர்தார்ஜின்னு கண்டுபிடிக்கிறேன்னு கேட்டார்.

அதற்கு அவன் " நீங்கள் விலை கேக்கறது டிவி இல்ல, மைக்ரோவேவ் ஓவன்" அப்டின்னான்.




3 Comments:

At 2:42 PM, Blogger கைப்புள்ள said...

டாங்சுங்கோ!
இனிமேல் கைப்புள்ளக்கு சமர்ப்பணம்னு எல்லாம் போடாம கைப்புள்ளையையே ஹீரோவா வச்சு ஜோக்கு எழுதுங்கப்பா! அண்ணன் நல்லவரு வல்லவருனு எல்லாரும் தெரிஞ்சுக்கிட்டும்.

 
At 5:29 PM, Blogger விஜயன் said...

தல சும்மா தமாசு. உங்க சர்தார்ஜி ஜொக் படிச்சுட்டு அந்த பாதிப்புல இத பதிச்சதுனால உங்க பேர போட்டுட்டேன்.

மன்னிச்சுக்க தல தப்பாயிருந்தா

 
At 10:12 PM, Blogger கைப்புள்ள said...

என்னாங்க நீங்க! இதுக்கெல்லாம் போயி பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு. நான் கோவிச்சுக்கிட்ட மாதிரியும் எதுவும் எழுதலீங்களே!உங்களுக்கு ஏன் அப்படி தோணுதுனு தெரியலியே?

என் பேர் பிரபலமானா எனக்கு சந்தோஷம் தானே? வாழ்க நிம் பணி! வளர்க நிம் கொற்றம்!

 

Post a Comment

<< Home