முயற்சி திருவினையாக்கும்
ஒருவன் கோயிலுக்குச் சென்று தனக்கு லாட்டரியில் ஒரு லட்சம் பரிசு விழ வேண்டும். இல்லாவிட்டால் மறுநாள் தன்னுடைய தொழிலில் மிகுந்த நஷ்டம் ஏற்படும் என்று வேண்டினான்.
அதுபோலவே மறுநாள் தொழிலில் நஷ்டம் அடைந்தான். மறுபடியும் கோயிலுக்குச் சென்று தனக்கு லாட்டரியில் பத்து லட்சம் பரிசு விழ வேண்டும். இல்லாவிட்டால் மறுநாள் தன்னுடைய வீடு, சொத்து விற்று விட வேண்டி வரும் என்று வேண்டினான்.
சொன்னது போலவே சொத்தையெல்லாம் இழந்தான். திரும்பவும் கோயிலுக்குச் சென்று தனக்கு லாட்டரியில் ஒரு கோடி பரிசு விழ வேண்டும். இல்லாவிட்டால் மறுநாள் தன்னுடைய மனைவி, மக்கள் அனைவரையும் இழக்க வேண்டி வரும் என்று வேண்டினான்.
அப்போது கடவுள் அவன் முன்னே தோன்றி " நீ முதலில் லாட்டரி சீட்டை வாங்கு" என்று கூறினார்.
சும்மா கடவுளை வேண்டினால் மட்டும் போதாது. 'லாட்டரி சீட்டை (முயற்சி) நாம் தான் வாங்க வேண்டும்.
1 Comments:
நல்ல நகைச்சுவையான கதை போல் தோன்றினாலும் முயற்சி திருவினையாகும் என்ற கருத்தை வழியுறுத்துகிறது.
Post a Comment
<< Home